இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள்

Published

on

இலங்கையில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள்

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவியர், திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கருக்கலைப்பு செய்து கொள்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என நிபுணத்துவ மருத்துவர் ஜீ.ஜீ சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமூகப் பாதுகாப்பு நிலைமைகளில் காணப்படும் குறைபாடு காரணமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சிறுமியரின் எண்ணிக்கை அதிகம் என தெரிவித்துள்ளார்.

பால்வினை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சமூகப் பொருளாதார காரணிகளினால் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதனால் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சவல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version