இலங்கை

இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு நெருக்கடி

Published

on

இத்தாலி வாழ் இலங்கையர்களுக்கு நெருக்கடி

இலங்கையில் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் முறையின் மூலம் பெருமளவானோர் தொழில் வாய்ப்புகளை பெற்ள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 02 வருடங்களாக இந்த முறைமை செயற்படுத்தப்படாமை காரணமாக, ஏராளமானோர் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரமாக மாற்றும் திட்டம் இருந்த போதிலும் தற்போது அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மீண்டும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, இரு நாட்டு போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version