இலங்கை

ரணிலுக்கு சவால் விட்டுள்ள நாமல்

Published

on

ரணிலுக்கு சவால் விட்டுள்ள நாமல்

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான ஒருவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலும், பொதுஜன பெரமுன அதனை ஆதரித்தாலும் ரணில் விக்ரமசிங்கவால் வெற்றிபெற முடியாது என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது ஜன பெரமுனவும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட முடியும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கதிரையில் இருந்தால் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்க போதிய ஆசனங்கள் கிடைக்காது.

இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்களையே ஒன்று திரட்டி அதனை செய்ய முடியும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version