இலங்கை

தென்னிலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு – கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

Published

on

தென்னிலங்கையில் வலுக்கும் எதிர்ப்பு – கோட்டாபயவை கடுமையாக சாடிய தேரர்

பௌத்த தேரர் ஒருவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கோட்டாபயவை கடுமையாக சாடியுள்ளார்.

கோட்டாபய நாட்டிற்கும் மக்களிற்கும் துரோக இழைத்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரே இவ்வாறு கடுமையான குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றி வைத்திருந்தார்.

கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம். அதன் காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார்.

நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version