இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

Published

on

வாகன இறக்குமதி தொடர்பான ஜனாதிபதியின் கருத்து

தனியார் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டம் வாகன கொள்வனவாளர்களுக்கு சாதகமான செய்தியாக இருக்காது என உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வருடம் முதல் தனியார் வாகன இறக்குமதியை படிப்படியாக மீள ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, உள்ளூர் வாகன இறக்குமதியாளர்கள் அதற்கு இவ்வாறு மாற்றுக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த அறிவிப்பு, தேக்கநிலையில் உள்ள வாகனத்துறைக்கு புதிய உயிர்ப்பை அளிக்கும் அதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான வரி கட்டமைப்புகளில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஜனவரியில், அரசாங்கம் வரி கட்டமைப்பை மாற்றியமைத்ததன் விளைவாக வாகன இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version