இலங்கை

நாட்டில் நீர் விநியோகத்தில் ஏற்பட உள்ள சிக்கல்

Published

on

நாட்டில் நீர் விநியோகத்தில் ஏற்பட உள்ள சிக்கல்

நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சியான காலநிலை அதிகரித்து வருவதால் மக்களிடையே நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனால் நாட்டில் நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது.

குறித்த தகவலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக மேட்டுநிலப் பகுதிகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பின் முடிவிடங்களில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை எந்தவொரு பகுதிக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவில்லை என சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமான களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version