இலங்கை

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

Published

on

கட்டுநாயக்காவிற்கு மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள சர்வதேச விமான நிறுவனம்

தாய்லாந்தின் விமான சேவை நிறுவனமான தாய் எயர்வேஸ் நிறுவனமானது, இலங்கைக்கான திட்டமிடப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தாய் எயர்வேஸ் விமான பயணத்தின் இறுதி இலக்காக பாங்கொங் விளங்கும் நிலையில், இதில் 28 நாடுகளில் உள்ள 60 நகரங்களுக்கு மேல் செல்ல முடியும் எனவும் கூறப்படுகிறது.

தாய் எயர்வேஸ் நிறுவனமானது ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள முக்கிய இடங்களுக்கிடையே செயற்படுவதாக கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் முறையே 207,182 மற்றும் 218,350 சுற்றுலாப்பயணிகளை (விமானம் மூலம்) வரவேற்கும் வகையில் இந்த திட்டம் அமையும் என்றும் நம்பப்படுகிறது.

விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் விமான நிறுவனத்தை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய நுழைவாயிலுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இதன்போது கூறியிருந்தது.

மேலும் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்குள் 36 விமான சேவைகளை வழங்கியுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து துறையில் அதன் முக்கிய பங்கை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version