இலங்கை

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்

Published

on

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதம் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய போது சபாநாயகர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியதாகவும், அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான கையொப்பங்களை திரட்டியிருந்தது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்தின் போதும் சபாநாயகர் அரசியல் அமைப்பினை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் இரண்டு நிமிடங்கள் கூட காத்திருக்காது பதவியை விட்டு வெளியேறுவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version