இலங்கை

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

Published

on

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

காலாவதியான மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”கலாவதியான மருந்துப் பொருட்களை வைத்தியசாலையில் பயன்படுத்துமாறு சுற்று நிருபங்கள் வெளியிடப்படவில்லை.

சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களினால் இலவச மருத்துவ சேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதன்படி மக்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் சேவையை பெற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

மேலும், கலாவதியான மருந்துப் பொருட்களை பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவுறுத்தல் வழங்கியதில்லை

காலாவதியாகி மருந்துப் பொருட்கள் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கலாவதியான மருந்து வகைகளை பயன்படுத்துமாறு கூறப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version