இலங்கை

இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியான வர்த்தமானி இரத்து

Published

on

இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வெளியான வர்த்தமானி இரத்து

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மகிந்த அமரவீர இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

அத்துடன் வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனை பொருள் விவசாயிகளை வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனை பொருட்களின் உற்பத்தியை வீழ்ச்சியடைய செய்யும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Exit mobile version