இலங்கை
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
யுக்திய நடவடிக்கைக்கு உதவுவதற்கு புதிய தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைக்கு உதவுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
071 – 8598800 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது ops.narcotics@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக பொது மக்கள் விசேட நடவடிக்கை பிரிவுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்பவர்களின் அடையாளங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.