இலங்கை

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி

Published

on

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதியின் மூலம் சுமார் நான்கு பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்து வகையே இவ்வாறு மோசடியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் வழமையான நடைமுறைகளக்கு புறம்பான வகையில் மருந்துப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மார்பகப் புற்று நோய்கக்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைக்கு நிகரான எனினும் தரம் குறைந்த மருந்து வகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

அப்போதைய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன, அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் லால் ஜயகொடி உள்ளிட்ட சிலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Exit mobile version