இலங்கை

இராணுவத்தின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

Published

on

இராணுவத்தின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் உதவியை பெற்றுக்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று (11.03.2024) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை, குறிப்பாக சாலை மறியல் சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லாமை, கடுமையான குற்றவாளிகளை கைது செய்யும் பணியை இலகுவாக்கும் காரணங்களுக்காக இராணுவத்தினர் அழைக்கபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version