அரசியல்

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

Published

on

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது கூட்டம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி விக்ரமசிங்க நிச்சயமாக நிறுத்தப்படுவார் என தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

நெருக்கடி காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தவறியதற்கு வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் குற்றம் சொல்லப் போவதில்லை என்றும் அவர்களால் செயல்பட முடியவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவ்வான் விஜேவர்தன, உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version