இலங்கை

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை

Published

on

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலை

கனடா – ஒட்டோவா படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் விபரங்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த படுகொலை தொடர்பில் கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலைசெய்யப்பட்ட குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் கண்டுள்ளோம்.

சந்தேகத்தின் பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளோம்.

ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யக (35) – தாய், இனுக விக்ரமசிங்க (7) – மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) – மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களோடு உயிர் தப்பியுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டோவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 06 பேரும் இலங்கையர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் தலைநகர் ஒட்டோவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் படுகாயமடைந்த ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றத்தை செய்தவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருக்கமான வன்முறையின் விளைவாக இருக்கலாம் என ஒட்டோவா பொலிஸார் கூறியுள்ளனர்.

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் திடீரென குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறுகையில்,

“துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் விரைந்தோம். தான்கிரெட் தெருவில் 41 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே சென்று பார்த்தபோது, துப்பாக்கி சூட்டிற்கான காயங்களுடன் 45 மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

மேலும், 6 மற்றும் 12 வயதுடைய 2 சிறுவர்களின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டது.

பின்னர், 44 வயது கொண்ட மற்றொரு நபரின் உயிரற்ற உடலும் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளமை தெரியவந்தது.” என்று தெரிவித்துள்ளனர்.

இதன்படி இந்த மரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த மாதம் ஒட்டோவாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version