இலங்கை

உயிருடன் விடுதலை செய்யுங்கள் : இந்திய அரசிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

Published

on

உயிருடன் விடுதலை செய்யுங்கள் : இந்திய அரசிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை உயிருடன் விடுதலை செய்யுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் மூவரும் அவர்களுடைய குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், இந்திய பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (06) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சாந்தனின் வருகை தொடர்பாக நான் மனோகணேசன் எம்.பியுடன் சென்று இலங்கையினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசப்ரி மற்றும் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் பேசி இருந்தேன்.

அதேபோல இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தினுடைய தூதரக அதிகாரியையும் கூட தொடர்பு கொண்டு சாந்தனின் வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டிருந்தது.

உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட சாந்தனின் உயிரற்ற உடல் மட்டும்தான் இங்கு வந்தது என்பது மக்கள் மனங்களிலே மிகப்பெரிய வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே தற்போது இந்திய சிறையில் இருக்கின்ற முருகன் ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர வேண்டும்.

அதற்கு உயர்ந்த சபையின் ஊடாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரையும் பாரதத்தினுடைய பிரதமரையும் இலங்கையினுடைய அதிகாரிகளையும் அவர்களை இந்த மண்ணிலே தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வகையிலே ஒரு ஏற்பாட்டை ம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Exit mobile version