இலங்கை

ஏப்ரல் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ள பணம்

Published

on

ஏப்ரல் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ள பணம்

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 410,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 7500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக நோயாளர் 50,000 பேருக்கு தலா 7500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version