இலங்கை
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு
க.பொ.த சாதாரணதரத்தின் பின் பரீட்சையென்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் முறை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியதன் பின், பரீட்சை ஒன்றை எதிர்கொள்வதன் ஊடாக அரச பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்படவுள்ளது.
கல்வி கொள்கை கட்டமைப்பிற்குள் இந்த விடயம் காணப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கல்வி தொடர்பான கண்காணிப்பு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்படும்.
தனியார் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுகின்றன. அதனூடாக மாணவர்களுக்கு கல்விக்கான கால எல்லையை முகாமைத்துவம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.