இலங்கை

இலங்கையில் சொத்துக்களை குவிப்பவர்களுக்கு சிக்கல்

Published

on

இலங்கையில் சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட, 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டிய அவசியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிப்பதற்கு மின்னணு அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்புடைய சட்டம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, புதிய சட்டவிதிகளின் படி சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்கும் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் கடன்களை அறிவிக்கும் முறை மற்றும் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான திருத்தப்பட்ட முறைமை அடங்கிய சுற்றறிக்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் www.ciaboc.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம், மறு அறிவித்தல் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version