இலங்கை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் குறித்த பிரேரணையை இன்றையதினம் ( 05.03.2024) சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தை மேற்கொள்வதற்கான திகதியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.
முன்னதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த திருத்தங்களை உரிய முறையில் மேற்கொள்ளாது இணையவழி கட்டுப்பாட்டு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இதனை சுட்டிக்காட்டிய போதும் அதனை சட்டமாக்கும் சபையில் சபாநாயகர் கையெழுத்திட்டதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாகவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.