இலங்கை

அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன : அனுர

Published

on

அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன : அனுர

“அரச வருவாயை உயர்த்துவதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன என “தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்றைய கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. சுங்க திணைக்களம் மற்றும் கலால் திணைக்களத்தின் ஊடாகவும் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும்.

ஐ.ஆர்.டி ஊழியர்களின் திறமையை அதிகரித்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க முடியும்.

நாங்கள் பணத்தைக் கண்டுபிடிக்க முடியும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் கலந்துரையாடியுள்ளோம். திணைக்களத்தில் பயன்படுத்தப்படும் சட்டங்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

பணியாளர்களின் செயற்றிறனை அதிகரித்தால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்கலாம். ஐ.ஆர்.டி, சுங்க மற்றும் மதுவரி திணைக்களங்களில் இருந்து கிடைக்கும் வருவாயையும் அதிகரிக்க முடியும், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் ரூ.90 பில்லியன் ரூபா மதுவரி திணைக்களத்திற்கு செலுத்தவேண்டியுள்ளது.

நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் மக்களின் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதி செய்யும்.

மேலும், ரத்தின வளங்கள், தேயிலை தொழில், சுற்றுலா மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீண்ட கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version