அரசியல்

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

Published

on

நாமல் தலைமையில் எதிர்க்கட்சியில் 40 எம்.பி.க்கள்

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் அமர வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத் தலைவர்கள் அல்லாதவர்களுக்கும் பொது மக்கள் முன்னணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சி எடுத்த இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் பொதுத் தேர்தலில் எவருக்கும் வேட்புமனு வழங்காமல் இருப்பது குறித்தும் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சுமார் இருபது எம்.பி.க்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தயாராக உள்ளதாகவும், அந்த எண்ணிக்கை நாற்பதாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாமல் ராஜபக்சவின் கருத்தின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சிலர் முதலில் பொதுத்தேர்தலை நடத்த விரும்புவதாகவும் போலியான செய்திகளை பரப்பி நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version