இலங்கை

கொழும்பை வந்தடைந்த ரஷ்ய ஏவுகணை கப்பல்

Published

on

கொழும்பை வந்தடைந்த ரஷ்ய ஏவுகணை கப்பல்

ரஷ்ய பசுபிக் கடற்படையின் ஏவுகணை கப்பல் வர்யாக், கொழும்பு துறைமுகத்திற்கு வணிக அழைப்பை மேற்கொண்டுள்ளது.

கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த ரஷ்ய கப்பல் மார்ச் 4 வரை கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கொடி அதிகாரி கெப்டன் 1 ஆவது தரவரிசை வெலிச்கோ அனடோலி வாசிசீவிச் மற்றும் கெப்டன் 2 ஆவது தரவரிசை குளுஷாகோவ் ரோமன் நிகோலாவிச் கட்டளை அதிகாரி ஆகியோர் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திக்க உள்ளனர்.

187 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் 529 பேர் கொண்ட ஏவுகணை கப்பலாகும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, ​​ரஷ்ய கடற்படை கப்பல் நீர் மற்றும் எரிபொருள் விநியோகங்களை நிரப்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் வரவேற்பு விழாவில், இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரக ஊழியர்கள், அந்நாட்டின் கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைமுக சேவைகளின் பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Exit mobile version