இலங்கை
வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் வெப்பமான காலநிலையானது மே மாதம் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களின் உடலால் உணரப்படும் வெப்பநிலையானது வழமையயை விட அதிகமானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் உடலுக்கு சில பதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
தலைவலி, வயிற்று வலி, கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், தோல் நோய், உடல் எடை குறைதல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகள் உடல் ரீதியாக ஏற்படும் எனவும் அதற்கு தேவையான முன்னாயத்தம் எடுத்துக்கொள்வது நல்லது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் வெளிப்பு செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.