இலங்கை

ஐ.நா தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் இலங்கை…!

Published

on

ஐ.நா தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் இலங்கை…!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களை தொடர்ந்தும் நிராகரிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்த நிலையில், நேற்றைய தினம் (28) நடைபெற்ற கூட்டத்தொடரில் காணொளி வாயிலாக உரையாற்றும் போதே, அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் அரசாங்கம் நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான வழிமுறைகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளிற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தற்போது பொருளாதாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயல்முறை ஆகியவற்றில் பாரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாது என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கை மக்களுக்கு பயனளிக்ககூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து அரசாங்கம் செயற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version