இந்தியா

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

Published

on

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

தவறான சிறைவாசத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து சாந்தன் காலமான நிலையில் அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சாந்தனின் மரணம் குறித்து மேலும் தெரிவித்த தமிழீழ அரசாங்கம், “உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

மேலும், சிறப்பு முகாமில் தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.

அத்துடன் 33 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறப்பு முகாம் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும்.

மேலும் சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்படவேண்டும் அத்தோடு சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தோடு அவரை மீண்டும் பார்க்கவும் மற்றும் அணைக்கவும் காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.

மேலும், அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது மற்றும் மீதமுள்ள அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் இனியும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Exit mobile version