இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூடப்படும் அபாயம்

Published

on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூடப்படும் அபாயம்

ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் விமான நிலையத்தை கொள்வனவு செய்ய அதானி நிறுவனம் மட்டுமன்றி சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் காத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நிறுவனம் அதன் அங்கீகாரத்தை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் அதனை இலவசமாக வழங்கினாலும் எவரும் ஏற்றுக்கொள்ள முன்வர தயங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய விமான தாமதம் தொடர்பில் கேட்டறிந்த அமைச்சர், அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தார்.

ஊழியர்களின் தாமதத்தினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version