இலங்கை

கண்டியில் உலக சாதனை: ஆபத்து குறித்து அதிர்ச்சி தகவல்

Published

on

கண்டியில் உலக சாதனை: ஆபத்து குறித்து அதிர்ச்சி தகவல்

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட வயிற்றில் படிந்திருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றும் சத்திரசிகிச்சையானது உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சை என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் வைத்திய நிபுணர் கலாநிதி அமில ஷசங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை ஆபத்துகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக நேற்றைய தினம் (25.02.2024) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஆபத்துகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் விளக்கமளிக்கையில், பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு கூட ஆபத்தாகிவிடும். தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக செய்தி ஒன்று வந்தது. அந்தச் செய்தியில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 62 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றியிருந்தார்.

இந்த மாதிரி அறுவை சிகிச்சையில் 8 லீட்டருக்கு மேல் அகற்றப்பட மாட்டாது. காரணம் அது உயிருக்கு ஆபத்தானது. அது இவ்வாறு குறைக்கப்படும் அறுவை சிகிச்சை அல்ல. அது உடல் வடிவத்தை மீண்டும் பெறும் சிகிச்சையாகும்.

குறித்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version