இலங்கை

தம்பட்டம் அடிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்

Published

on

தம்பட்டம் அடிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்

இலங்கையின் வரலாற்றை ஆராயும் போது எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட தலைவர்களை விட தம்பட்டம் அடிக்கும் தலைவர்களுக்கே இடம் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கும் இளைஞர்கள் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கேகாலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ”ஜெயகமு ஸ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளான அன்று ஸ்மார்ட் யூத் கிளப் வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடத்திற்கு முன்பு மிக மோசமான இடத்திற்கு வீழ்ந்த இலங்கை, தற்போது உலகிற்கு அதிசயமாக மாறியுள்ளது.

இவ்வாறானதொரு யுகத்தில்தான் நாம் கேகாலை இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க கேகாலைக்கு வந்துள்ளோம். இளைஞர்களே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் யாது என்று கேட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

நமது இலக்கியம், பண்பாடு போன்றவற்றின் மூலம் நமது சிந்தனையை மாற்றியிருந்தால், இவ்வளவு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்க மாட்டோம்.

வேறு சில இடங்களில் நல்லவை ஏழைகளிடம் இருப்பதாகக் கற்பிக்கப்படுகிறது. கடவுள் ஏழைகளுடன் மட்டுமே இருக்கிறார் . இந்த வகையான எண்ணங்கள் வறுமைக்கு இட்டுச் செல்கின்றன அல்லது ஒருவரின் துக்கத்தை நேரடியாக வெறுப்பாக மாற்றுகின்றன.

நம்மை துன்பத்திலும், வறுமையிலும் சிக்க வைத்து, அதை சாதகமாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதை அரசியல் இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆனால் நம் இலக்கியங்களில் இதற்கு எதிராக எழுதப்பட்ட நேர்மறையான படைப்புகள் சிலவே உள்ளன. இளைஞர்களே தைரியமாக இருங்கள் அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

நாம் எமது வலிமையை வளர்த்துக் கொண்டால், எந்த சவாலையும் எம்மால் முறியடிக்க முடியும். 10,000 இளைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல் முகாமைத்துவத்தில் பயிர்ச்சி பொறுங்கள் சுகாதாரத் துறையில் காணப்படும் பராமரிப்பு சேவைகளுக்கு உங்களைப் பரிந்துரைக்க நாங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையை தெரிவு செய்கிறோம்.

இதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் உங்களை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்ப விரும்புகிறோம்.

மேலும், இது எனக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இது உங்கள் எதிர்காலத்திற்கானது. ஒரு நாடாக, நாம் சிறந்த இடத்தில் இருக்கிறோம்.

காசியப்பன் மன்னன் பரந்த தூரநோக்கு கொண்ட தலைவர். காசியப்பன் போன்ற தலைவர்களுக்கு இடம் கொடுக்காத இந்நாட்டில் நிஸ்ஸங்கமல்ல போன்ற மன்னர்களுக்கே இடம் உண்டு. நான் ஏன் நிஸ்ஸங்கமல்ல மன்னனை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன்?

வரலாற்றில் அதிக கல்வெட்டுகளை எழுதியவர். ஆனால் அவர் செய்தது ஒன்றும் இல்லை, ”தம்பட்டம் அடிக்கும் தலைவர்கள்” வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கின்றனர் அது அபாயகரமானது. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் வெற்றி பெறலாம். அதற்கு இளைஞர்களாகிய நீங்கள் மாற வேண்டும். ரணில் விக்ரமசிங்க 2048 ஆம் ஆண்டளவில் இருப்பாரா? இல்லை, நாங்கள் கூட இல்லை. ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள்.

இவை அனைத்தும் உங்களுக்காக செய்யப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version