இந்தியா

சாந்தனுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி

Published

on

சாந்தனுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி

சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதம் மத்திய அரசினால் வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சாந்தன் கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனர்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனை தொடர்ந்து தற்போது சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டாா்.

கடந்த மாதம் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த நிலையில் சாந்தன் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னர், சாந்தனின் வேண்டுகோளுக்கமைய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Exit mobile version