இலங்கை

யாழில் பாரிய பயணிகள் படகு

Published

on

இலங்கையின் தொழில்நுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் சமீபத்திய தயாரிப்பான பாரிய பயணிகள் படகு ஒன்று, (Eco80) யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவுள்ளதோடு அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சூரியக்கலங்கள் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக அமைந்துள்ளது.

அத்துடன், தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான நிறுவனம் ஒன்றிற்காக மகாசென் மரைன் இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது.

Exit mobile version