இலங்கை
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிக ஆபத்தானது!
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிக ஆபத்தானது!
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் வடக்கு பொலிஸ் பிரிவிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் பிரிவினைவாத யுத்தம் ஏற்படும் சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகள், நேரடியாக வட மாகாண பொலிஸாருக்கு உதவிகள் வழங்கக் கூடும்.
13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மிகவும் ஆபத்தானது பொலிஸ் அதிகாரம்.
பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் நோக்கில் தாம் 22ம் திருத்தச் சட்டம் என்ற திருத்தமொன்றை கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என உதய கம்மன்பில சிங்கள தொலைக்கட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.