இலங்கை
விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி
விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஊடாக இலகுரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கும் பிரேரணையொன்று கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொரகஹமுல்லவுக்கும் அதிகாரிகமவுக்கும் இடையிலான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அதற்கான அனுமதி மற்றும் இறுதித் தீர்மானத்தைப் பெறுவதற்காக பிரேரணையை மகாவெலிக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விக்டோரியா அணையின் மீது வாகனம் ஓட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது.
விக்டோரியா அணையின் மீது வாகன போக்குவரத்து தற்போது மகாவலி அதிகாரசபை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் பாதுகாக்கப்பட்ட வலயத்திற்கும் இடையிலான பாதுகாப்புப் பணிகளே இதற்குக் காரணம்.
விக்டோரியா நீர்த்தேக்கம் விவசாயத்திற்கு நீர் பெறுதல், நீர் மின்சாரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு அணையை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியதன் மூலம் அங்கு குடியிருந்த ஆரம்ப குடியிருப்பாளர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.