இலங்கை

தேர்தல் குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே

Published

on

தேர்தல் குறித்து அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும், இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்க வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பதவி வகிக்கும் அரசாங்கம் சட்ட ரீதியானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது எளிமையான ஒர் செயற்பாடு கிடையாது எனவும், அது அரசியல் அமைப்புடன் நேரடித் தொடர்புடையது எனவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version