இலங்கை

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை

Published

on

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(19.02.2024) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Exit mobile version