இலங்கை

செங்கடல் நெருக்கடியால் இலங்கைக்கு தொடர்ந்தும் வருமானம்

Published

on

செங்கடல் நெருக்கடியால் இலங்கைக்கு தொடர்ந்தும் வருமானம்

இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானமும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் கொள்ளளவிற்கு ஏற்ப துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கு சுமார் 580 மில்லியன் டொலர் செலவில் வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு துறைமுகத்தின் அவசியத்தை நன்றாக உணர முடிந்துள்ளது. அதற்கமைய, மேலும் பல கப்பல்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு ஏற்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை மேலும் பல இலாபத்தை எதிர்பார்க்க முடியும் என்பது இதன் ஊடாக தெளிவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version