இலங்கை

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையே விமான சேவை

Published

on

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையே விமான சேவை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.இந்நிலையில், கொள்கலன் கப்பல் போக்குவரத்து சுமார் 32% வளர்ச்சி கண்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில், இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கும் இடையே கைசாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

அத்துடன் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போதுள்ள சேவை உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் ஏற்படும் தாமதத்தை தடுப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் எம்மிடம் குறிப்பிட்டார்.

அத்துடன், பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ (Indigo Airlines) விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், 31 பயணச்சீட்டு கருமபீடங்கள் மற்றும் புதிய முனையக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் முதலீட்டு விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன. .

தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு 09 மாதங்களுக்குள் தீர்வு காண முடியும். அத்துடன், ஜப்பான் JICA நிறுவனத்தின் தலைவர் நேற்று முன்தினம் (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலில் இரண்டாவது முனையக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version