இலங்கை
தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடு
தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ நாடு
தன் பாலின சிவில் திருமணத்தை அனுமதிக்கும் பிரேரணைக்கு ஐரோப்பிய நாடான கிரேக்க நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏதென்ஸ் பாராளுமன்றம் இந்த முக்கிய பிரேரணைக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் நாடாக கிரீஸ் மாறியுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மொத்தம் 176 எம்.பி.க்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால் 76 உறுப்பினர்கள் தொடர்புடைய சீர்திருத்தத்தை நிராகரித்தனர், இருவர் வாக்களிப்பில் இருந்து விலகினர் மற்றும் 46 பேர் ஆஜராகவில்லை. புதிய இந்த சட்டத்தால், தன் பாலின திருமணம் மட்டுமின்றி, இந்த பிரிவினர் பிள்ளைகளை தத்தெடுக்கவும் முடியும்.
இது ஒரு வரலாற்று தருணம். எப்போது சட்டமாகும் என்று எம்மில் பலருக்கு உறுதியாக தெரியவில்லை என சமூக செயற்பாட்டாளர் Stella Belia தெரிவித்துள்ளார். ஏதென்ஸ் பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் காரசாரமான விவாதங்களுக்கு பின்னர் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஏற்கனவே 36 நாடுகளில் தன்பாலின திருமணம் சட்டத்திற்கு உட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள வரிசையில் கிரேக்கமும் இணைந்துள்ளது. ஆனால் இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சியான மைய-வலது புதிய ஜனநாயகக் கட்சி எதிராக வாக்களித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.