இலங்கை

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

Published

on

கடன் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால் ஏற்பட்ட மாற்றம்

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியதால், எரிவாயு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளின் தொடர்ச்சியான விநியோகத்தை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை 36 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அரசாங்கம் கால அவகாசம் பெற்றுள்ளது.

கடனாளிகளுடன் இலங்கை ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்ததால், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாததற்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அடுத்த ஐந்து முதல் ஆறு வருடங்களுக்குள் 37 வீதமான வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும்.

51 வீதமான கடன்களை 6 முதல் 21 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். ஏனைய 12 வீதத்தை 20 வருடங்களின் பின்னர் செலுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நிதியை இலங்கை மிகக் குறைவாகப் பயன்படுத்தினாலும், 2027ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version