இலங்கை

ரணில் தரப்புடன் இணைய இரகசிய நகர்வை மேற்கொள்ளும் விமலின் சகா

Published

on

ரணில் தரப்புடன் இணைய இரகசிய நகர்வை மேற்கொள்ளும் விமலின் சகா

கடுவலை நகர சபையின் முன்னாள் நகர மேயர் புத்திக ஜயவிலால் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் கடுவலை நகர சபையை மொட்டுக் கட்சி கைப்பற்றியிருந்தது.

அதன் நகராதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் புத்திக ஜயவிலால் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் விமல் வீரவன்சவின் நெருங்கிய பிரமுகர்களில் ஒருவரான கடுவெல முன்னாள் மேயர் புத்திக ஜயவிலால் தற்போது தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிது காலம் அவர் அரசியல் நடவடிக்கைகளை விட்டும் ஒதுங்கி வர்த்தக நடவடிக்கைகளில் மாத்திரம் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடுவெல தேர்தல் தொகுதியில் விமல் வீரவன்ச அண்மையில் நடத்திய பேரணியில் கூட அவர், பங்கேற்கவில்லை என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக இருந்தது.

இதற்கமைய புத்திக ஜயவிலால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான இரகசிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிக விரைவில் அவரது தலைமையில் தேசிய சுதந்திர முன்னணியின் இன்னும் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

Exit mobile version