இலங்கை

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

Published

on

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

கனேடியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பழகிய பாகிஸ்தான் உளவுப் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கூறிவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வரும், சத்யேந்திர சிவால் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர், கனடாவில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் இணையத்தளம் வாயிலாக பழகிவந்த நிலையிலேயே, இந்திய இராணுவம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பான இரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கினால் அதற்கு பதிலாக பெருந்தொகை பணத்தை தருவதாக அந்த பெண் கூற, சிலர் குறித்த இரகசியங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றை அறிந்த இந்திய பொலிஸார், தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக இந்தியாவுக்கு வந்த சிவாலை லக்னோவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதேவேளை, சிவாலை ஏமாற்றிய பெண் கனேடியர் அல்ல எனவும் அவர் பாகிஸ்தான் உளவு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் இந்திய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version