இலங்கை

இலங்கையில் பண்ணை ஆய்வுகளை நிறைவு செய்த இந்திய நிறுவனம்

Published

on

இலங்கையில் பண்ணை ஆய்வுகளை நிறைவு செய்த இந்திய நிறுவனம்

இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு, என்எல்டிபி (NLDP) என்ற தேசிய கால்நடை மேம்பாட்டு சபைக்கு சொந்தமான 31 பண்ணைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது.

என்எல்டிபி (NLDP) பண்ணைகளை அமுல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது மற்றும் இலங்கையின் திரவ பால் தொழிற்துறையை ஊக்குவிப்பதில் ஒத்துழைக்கும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதை அடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

ஆய்வின் போது அமுல் குழு பண்ணைகளின் நில பயன்பாடு, ஆண்டு உற்பத்தி, விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் பண்ணைகள் முழுவதும் பயன்படுத்தப்படாத நிலம் பற்றிய தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த தரவுகள் என்எல்டிபி (NLDP) பண்ணை மேம்பாட்டிற்கான புதிய திட்டத்தை உருவாக்க பயன்படுத்தப்படும்.

இந்தநிலையில் முன்மொழியப்பட்ட குத்தகை ஒப்பந்தம் உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து ஆட்சேபனைகளை எதிர்கொண்டுள்ளது.

எனினும், தமது வாழ்வாதாரம் மற்றும் பால் உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிருப்திகளை வெளிப்படுத்தி கடந்த சில மாதங்களாக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Exit mobile version