இலங்கை
நீல நிற சங்குப்பூக்களுக்கு அதிக கிராக்கி: கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய்
நீல நிற சங்குப்பூக்களுக்கு அதிக கிராக்கி: கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய்
அதிக மருத்துவ குணம் கொண்ட நீல நிற சங்குப்பூக்களுக்கு அதிக கிராக்கி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூக்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக கிராக்கி நிலவுவதுடன், அவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அதிக வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறப்படுகின்றது.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இந்த சங்குப்பூக்கள் உற்பத்தி செய்யப்படுவதால், விவசாயிகள் இதற்கு பெரும் செலவு செய்ய வேண்டியதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் நூறு பூச்செடிகள் பயிரிடும் ஒருவருக்கு தினமும் சுமார் பத்து கிலோ பூக்கள் கிடைக்கும் எனவும், அவற்றை உரிய முறையில் உலர்த்திய பின் சந்தைப்படுத்துவதனால், சுமார் பத்து கிலோ காய்ந்த பூக்களை தயாரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூக்களை விற்பனை செய்வதனால் கிலோ ஒன்றிற்கு சுமார் மூவாயிரம் ரூபாய் வருமானத்தைப்பெற முடியும் என்றும் கூறப்படுகின்றது.
ஹொரொவ்பத்தான பிரதேச செயலகத்தின் தலையீட்டின் மூலம் மரதன்கடவல பிரதேசத்தில் உள்ள 15 குடும்பங்களைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கு இந்தப் பயிர்ச்செய்கை தொடர்பான பயிற்சிகள் பிராந்திய செயலகத்தின் சிறு வர்த்தகப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து இலவச விதைகள் வழங்கப்பட்டு தற்போது பலர் இந்த சங்குப்பூச்செய்கையை வெற்றிகரமாக செய்து வருமானம் பெற்று வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு இந்தப் பூக்களை வளர்த்து, அவற்றை உலர்த்தி விற்பனை செய்த குடும்பமொன்று சுமார் மூன்று இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக ஹொரொவ்பத்தான பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.