இலங்கை
வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பாதாள உலக குழுக்களை இலங்கைக்கு அழைத்த வர நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கமைய, அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கான தூதரகங்களைச் செயற்படுத்தும் வகையில், அந்தத் தூதரகங்களில் குற்றவியல் அதிகாரிகளை பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வரும் தூதரகங்களை செயற்படுத்துவதற்காக குற்றவியல் சட்டத்தை அறிந்த அதிகாரிகளை தூதரகங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் குற்றவியல் சட்டம் பற்றிய அறிவு இல்லாத இராணுவ அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
குற்றவியல் சட்டத்தை அறிந்த அதிகாரிகளை இதற்காக நியமிக்க முடியுமானால், வெளிநாடுகளின் பொலிஸார், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த துறைகளுடன் இணைந்து குற்றவாளிகளை இலங்கைக்கு நாடு கடத்த முடியும் என பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலகக் குற்றவாளியை எப்படி நாடு கடத்துவது, நாடு கடத்தல் கோரிக்கைகளை அனுப்புவது எப்படி என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்குத் தெரியாது.
குறைந்தபட்சம் டுபாய், இந்தியா போன்ற பாதாள உலகச் செயல்கள் அதிகம் உள்ள நாடுகளில், குற்றவியல் சட்டத்தைப் புரிந்து கொண்டு நாடு கடத்தும் அதிகாரிகளை ஈடுபடுத்தி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.