இலங்கை

பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியே வந்ததும் அரச வேலை வாய்ப்பு

Published

on

பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியே வந்ததும் அரச வேலை வாய்ப்பு

இலங்கையில் பல்கலைக்கழகம் செல்லும் வரை இலவசக் கல்வி உண்டு. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்ததும் அவர்களுக்கு அரச சேவை உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நான் திருப்தி அடைகிறேன். நாம் கவனம் செலுத்தி தயார் செய்ய வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

இருந்தபோதும், தற்போதைய நிலைமை குறித்து திருப்தியடைய முடியும். உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருக்கின்றன.

எனவே, ஓரிரு விடயங்களை வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக இல்லை என்று கூற முடியாது.

ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோதும், நான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றபோதும் இந்த நாடு எப்படி இருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பொதுநிர்வாகம் சரிந்தது, சட்டத்தின் ஆட்சி சரிந்தது. அந்த நிலையை மிகக் குறுகிய காலத்தில் மாற்ற முடிந்தது. நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இதேவேளை, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான திட்டங்களை முன்வைப்பதே அவசியம்.

மேலும், நமது நாடு மிகவும் கனமான பொதுச்சேவையைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் வரை இலவசக் கல்வி உண்டு. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வந்ததும் அவர்களுக்கு அரச சேவை உள்ளது.

மேலும் மக்களுக்கு இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் அரசு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் போதுமான நிதி இருக்க வேண்டும். ஒரு நாடாக, நாட்டிற்கு அதிக வருமான ஆதாரங்கள் இல்லை. இதுதான் உண்மை நிலை என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version