இலங்கை
இந்து சமுத்திரத்தில் செல்வாக்கை இழக்கிறதா அமெரிக்கா : எச்சரிக்கிறார் ரணில்
இந்து சமுத்திரத்தில் செல்வாக்கை இழக்கிறதா அமெரிக்கா : எச்சரிக்கிறார் ரணில்
இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தில் அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீன – ரஷ்ய ஈரானிய மூலோபாயங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை மிகச்சரியாக தாக்குகின்றன எனவும் அமெரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன எனவும் ரணில் கூறியுள்ளார்.
“இந்துசமுத்திரத்தில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் காசா யுத்தம் கூடிய விரைவில் முடிவிற்கு வரவேண்டும், அதன் பின்னர் ஐந்து வருடங்களிற்குள் சுதந்திர பலஸ்தீனம் உருவாக வேண்டும், இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.”என்றார்.
உக்ரைன் யுத்தமும் அதன் பின்னரான மேற்குலகின் தடைகளும் வளமிக்க செழிப்பான பொருளாதாரம் மற்றும், சீனாவிலும் மேற்கு இந்து சமுத்திரத்திலும் புதிய சந்தைகளை கண்டறிய உதவியுள்ளது.
உதாரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளைகுடாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.
டுபாய் தற்போது உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களின் நிதிச்சந்தையாக மாறியுள்ளது, லண்டனைப் பின்தள்ளி அதன் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேலும், ரஷ்யா ஈரானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளது, ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கும் முக்கிய நாடாக ஈரான் விளங்குகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா, தென்னாபிரிக்கா, மியன்மார் போன்ற இந்து சமுத்திர நாடுகளுடன் கடல்சார் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சவுதிஅரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையில் பிளவினை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்களிப்பையும் செய்துள்ளது, ஈரானும் அதன் சகாக்களும் தற்போது மேற்காசியாவில் முக்கியமானவர்களாக மாறியுள்ளனர்.” என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.