இலங்கை
ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை
ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது சாத்தியமில்லை
ஒவ்வொரு பிரஜைக்கும் தனியான வரி கோப்புக்களை பேணுவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரி கோப்புக்களை ஒவ்வொருக்காகவும் உருவாக்குவதற்கு நீண்ட நேரமும், கூடுதல் ஆளணி வளமும் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்ட வரி கோப்பு ஒன்றை பரிசீலனை செய்வதற்கு குறைந்தபட்சம் அரை மணித்தியாலம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பொறுப்பு ஒன்பது உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி நாள் ஒன்றுக்கு 144 கோப்புக்களையே பரிசீலனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான கோப்புக்களை பரிசீலனை செய்வது மிகவும் சவால் மிக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு பிரஜைக்கும் வரி கோப்புக்களை திறப்பதனை விடவும் வரி செலுத்தாதவர்களிடமிருந்து வரிகளை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வரி செலுத்த தவறியவர்களிடம் அறவீடு செய்வதில் அசமந்த போக்கினை பின்பற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.