இலங்கை
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்! வலியுறுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்! வலியுறுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(08.02.2024) அமர்வில் உரையாற்றியபோதே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கோடிக்கணக்கான கடன்களை செலுத்த தவறிய வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கடன் சலுகைகளை வழங்கிய போதிலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடன் இதுவரை வழங்கப்படவில்லை.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் நாடாளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிந்த போதிலும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லை.
கடனுதவி வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதற்கான கற்கை நெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்த கடன் வழங்கப்படாமல் உள்ளதால்,விரைவில் இந்த கடன் வசதிகளை வழங்குங்கள்.
இந்த கடன் வசதி வழங்கப்படாததால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகிறது“என தெரிவித்துள்ளார்.