அரசியல்

கோட்டாபயவின் வெற்றிக்காக ஜேவிபி செய்த சதி

Published

on

கோட்டாபயவின் வெற்றிக்காக ஜேவிபி செய்த சதி

கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் நான் கேள்வி எழுப்புகின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல பகுதுயில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நமது நாட்டின் வருமானம் போருக்கே செலவிடப்பட்டது. போர், இயற்கை சீற்றங்கள், 83 கறுப்பு ஜூலை போன்ற காரணங்களால் நமது பொருளாதாரம் பின்னோக்கி சென்றது. 88/89 இல் செய்ததை மே 9ஆம் திகதி ஜே.வி.பி செய்தது.

பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கம்பஹாவில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர். மினுவாங்கொடை தொகுதியில் 13 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எங்களை மக்களிடம் இருந்து விலக்கி வைப்பதற்காகவே அத்தனையும் செய்தார்கள். அடிபட்டு நாம் கூர்மைப்படுத்தப்படுகிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

தற்போது இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தற்போது ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கிராம அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதையும் நாசப்படுத்த முயற்சிக்கின்றனர்.ஜே.வி.பி அவர்களை கிராமத்தில் எந்த வேலையும் செய்ய விடவில்லை. அவர்களும் செய்யவில்லை. சமூக விரோதிகளாக செயல்படுகிறார்கள்.

கேவலமான அரசியல் செய்யாதீர்கள். நாட்டைப் பற்றி சிந்தித்து வேலை செய்யுமாறு நான் அனுரகுமாரவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது அரசியல் கருத்துப்படி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்றவராக வரவேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை முடிவுக்கு கொண்டுவர உதவ வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் அச்சமோ சந்தேகமோ இன்றி நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அன்று நாம் மகிந்தவை வெற்றியடையச் செய்தோம்.

நாங்கள் தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த போது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் மகிந்தவை தெரிவு செய்தனர்.

நாட்டை ஒரு முறைமைக்கு கொண்டு வர நல்லாட்சியை உருவாக்க மக்கள் மைத்திரிபால சிறிசேனவை தேர்ந்தெடுத்தனர். அப்போது நான் அவருக்கு எதிராக இருந்தவன்.

ஈஸ்டர் தாக்குதலுடன், தேசிய பாதுகாப்பு வீழ்ந்த போது கோட்டாபய கொண்டுவரப்பட்டார். ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக இன்று நாங்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம்.

ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற நபரும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து குண்டுகளை வைத்தனர்.

மூன்று மகன்களும் ஜே.வி.பி கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள். கோட்டாபய வெற்றி பெறுவதற்காக ஜே.வி.பி கத்தோலிக்க மக்களை கொன்றதா என்று மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version