இலங்கை
அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்
அதிகாரிகளை எச்சரித்துள்ள ஜனாதிபதியின் செயலாளர்
அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் மாவட்ட செயலாளர்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் சமன் ஏக்கநாயக்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.
நிவாரண வேலைத்திட்டத்தை தாமதப்படுத்தும் அனைத்து முக்கிய பொறுப்புள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை சில குழுக்கள் தாமதப்படுத்துவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.
நிவாரண திட்டத்தை பெறாதவர்களுக்கான மேல்முறையீடுகள் மற்றும் புதிய பதிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், கொடுக்கப்பட்ட இலக்கில் ஒரு சில மாவட்ட செயலாளர்கள் 100% பூர்த்தி செய்துள்ளதாகவும் மற்றொருவர் 20% இலக்குடன் பூர்த்தி செய்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி இடம்பெற கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.